காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும், ராகுல் காந்தியின் சகோதரருமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
அரசியலில் சில நாகரீகங்களை கடைபிடிப்பது மரபு. எனக்கும், ராகுல் காந்திக்கும் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், சில கோட்பாடுகளின் படி ராகுல்காந்தியை எதிர்த்து பிரச்சாரம் செய்வது இல்லை என்று முடிவில் தீர்மானமாக இருக்கின்றேன் என்று வருண்காந்தி கூறியுள்ளார்.
மேலும் இம்முறை உ.த்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் தான் போட்டியிடப்போவதாகவும், தற்போது தான் எம்.பியாக உள்ள பிலிபிட்டில் தனது தாயார் மேனகா காந்தி போட்டியிடுவார் என்றும் கூறினார்.
ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் தான் உள்பட பாரதிய ஜனதாவின் முக்கிய வேட்பாளர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்றும் வருண்காந்தி கூறினார்.