வெளிநாட்டு பாலியல் தொழிலாளிகளிடம் ஏமாந்தாரா வருண்காந்தி? பரபரப்பு தகவல்
பாஜக எம்பியும் மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தியை வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்கள் மயக்கி இந்தியாவின் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் தகவல்களை திருடியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை பிரதமர் மோடிக்கு அமெரிக்க வழக்கறிஞர் எட்மண்ட்ஸ் ஆலன் என்பவர் அனுப்பியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை வருண்காந்தி கடுமையாக மறுத்துள்ளார். இந்த புகார் நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வருண் காந்தியிடம் இருந்து பல தகவல்களை திருடியதாக சர்ச்சைக்குரிய ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா மீதும் புகார் வாசிக்கிறார் ஆலன். வருண் காந்தியின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் ஆதாரங்களில் இருப்பதாக அடித்து கூறும் ஆலன் மேலும் சில ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளாராம்.