தமிழக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் கண்டிப்பு

தமிழக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் கண்டிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ள தமிழக அரசை கண்டித்து நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது சமீபத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை கண்டித்து கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று போராட்டம் நடத்தினார். அப்போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும். எக்காரணம் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது. வருகிற 5-ந் தேதி கர்நாடகம்-தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் சாலைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம்.

அன்றைய தினம் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு நடத்துவோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம். காவிரி விஷயத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்’ என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

Leave a Reply