வாழைக்காய் – 1
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து பொடிக்க :
மிளகாய் வத்தல் – 2
தனியா – 1 மேஜைக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
• அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மிளகாய் வத்தல், தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் போட்டு பொன்னிறமாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
• புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பிறகு நன்றாக கரைத்து அதனுடன், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
• புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வாழைக்காயை இரு துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
• அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பிறகு அதனுடன் வாழைக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
• கடைசியா பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
• சுவையான வாழைக்காய் மசாலா கறி ரெடி.