அஜித்தில் வலிமையுடன் மோதுகிறதா விஷால் படம்?

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் பொங்கல் கழித்து இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் நடிப்பில் து.பா சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’வீரமே வாகை சூடும்’.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்தின் வலிமை படத்துடன் மோதுவதை தவிர்க்க ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே.