திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம், வரும், 14ம் தேதி துவங்குகிறது. திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம், வரும் 14ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், காலை, 6:00 மணிக்கு, பெருமாள் தாயார் சேர்த்தி விஸ்வரூப தரிசனம்; காலை 6:00 மணி முதல் மூலவர் பொது தரிசனம்; காலை 7:30 மணி முதல், 8:45 மணி வரை திருவாராதனம்; காலை, 8:45 முதல் மதியம் 12:00 மணி வரை, சர்வதரிசனம் நடைபெறும்.கண்ணாடி அறை மண்டபத்தில், மதியம் 1:30 மணிக்கு, வசுமதி சமேதராய் உற்சவருக்கு திருமஞ்சனமும், மாலை 5:45 மணி முதல், 6:45 மணி வரை, பெருமாள் தாயார் உள் புறப்பாடும் நடைபெறும். தினமும் மாலை, 6:45 மணி முதல், இரவு 8:15 மணி வரை, இன்னிசை கச்சேரி நடைபெறும். மதியம், 12:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை உள்ள மூலவர் சேவை ரத்து செய்யப்பட்டு, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, மூலவர் தரிசனம் நடைபெறும்.