கங்கையில் சமாதி அடைகிறேன். வேந்தர் மூவீஸ் எஸ்.மதனின் அதிர்ச்சி கடிதம்

கங்கையில் சமாதி அடைகிறேன். வேந்தர் மூவீஸ் எஸ்.மதனின் அதிர்ச்சி கடிதம்

madhanகோலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகிய வேந்தர் மூவீஸ் கடந்த சில வருடங்களாக பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இந்நிலையில் வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் எஸ்.மதன் அதன் உரிமையாளர் பாரிவேந்தர் அவர்களுக்கு நான்குபக்க கடிதங்கள் எழுதியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.

எஸ்,மதன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் முழு விபரம் இதுதான்:

என் நண்பர்களுக்கு, என் உயிர் வேந்தருக்கு, என் குடும்பத்தினருக்கு,

ஒரு zeroவில் தொடங்கி, zeroவில் முடிகிறது. என் வாழ்க்கை கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணம் அடைந்தால் அடுத்த ஜென்மம் இல்லை. எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன்.

அப்புறம் என்ன இந்த letter.

என்னிடம் Admission பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்கள் பயப்பட வேண்டாம். பணம் SRM நிறுவனத்திலும் mgm(ODY) நிறுவனத்திலும் பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் அவர்களிடம் பெற்று கொள்ளலாம்.

என் வாழ்வில் எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை எந்த உலகுக்கு காட்டியவர். SRM நிறுவனம் என்றால் Admission, சினிமாவில், கட்சியில் (IJK) மதன் தான் என்று பெயரை கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன்.

SRM group No (1) ஆகா வர வேண்டும் என்று பாடுபட்டேன். SRMக்கு எந்த ஒரு பிரச்னை என்றால் முதலில் நன் நின்றேன். SRM என்று ஒரு universityயாக வளர்வதற்கு எங்கள் Group ஒரு காரணம். எல்லா seatயும் full. எல்லா இடத்திலும் வேலை. எப்படி சாத்தியம். இது Vendharக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் SRM இல்லாத எல்லா College Chairmanக்கும் மதனை தெரியும. ஏன் என்றால் எனக்கு வேந்தர் மேல் உள்ள வெறி. அவர் மனம் வருத்தப்படக்கூடாது என்று அவருக்காக எல்லாம் செய்தேன்.

மாணவர்கள் கல்லூரியில் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும். ஆனால் கல்லூரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும். எப்படி? எல்லாம் என் கையில் இருந்து. என் முயற்சி. என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம். என்னிடம் 8 வருடமாக உள்ள பெற்றோர் Address, மாணவர்கள் ஃபோன் நம்பர் உள்ளது நீங்கள் விசாரிக்கலாம்.

திருச்சி மருத்துவக் கல்லூரி பர்மிஷன் கிடைக்கவில்லை. இரண்டு வருடமாக நடக்கவில்லை. முகம் வாடியது. நான் என்ன செய்தேன். எவ்வளவு செய்தேன் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் என் நண்பர்களுக்கு தெரியும் எல்லாத்துக்கும் ப்ரூஃப் உள்ளது.

இந்த வருடம் P.6 and U.6 Medical admission NEET Exam இருந்தும் 102 Seat Fullஆக உள்ளது. SRMயும் MGMமியும். எப்படி? மாணவர்கள் Tiruchi Medical Collegeம் 1 வருடமாக வெயிட் செய்கிறாகள் எப்படி? எல்லாம் நான் பட்ட உழைப்பு.

IJK Party கட்சி தொடங்கி முதல் மாநாடு. Trainல் வெளி மாநில மாணவர்கள், 100 Bus மாணவர்கள் கலந்து கொண்டனர். எப்படி பீகார் எலெக்சன் 14 தொகுதிகளில் IJK நின்றது எப்படி?

கட்சி தொடங்கி 6 மாதம் இருக்கும் பொது எப்படி MLA.[Tirunelvi] election, Southல், IJK எப்படி வந்தது, BJP மாநாடு., Counsilor election., Puthukotai Bye election., Perabalur MP election, யார் செலவு செய்தது நான் தான். நான் பொய் சொல்லவில்லை இல்லத்தை இணையதளத்தில் YouTubeலிம் பார்க்கலாம்.

ஒரு படத்தில் டைரக்டர் ஷங்கர், வேந்தர் ஐயாவின் பெயரை கேவலப்படுதியதால் வந்தது தான் இந்த வேந்தர் மூவீஸ்.

எத்தனை படம் பண்ணினோம் எல்லாம் நஷ்டம். தலைவா படம் இவர் பேர் போட்டதால் படத்தையே நிறுத்தி விட்டார்கள். லிங்கா, பாயும்புலி எல்லாம் நஷ்டம் இருந்தாலும் வேந்தர் மூவிஸ் நிற்கவே இல்லை. இன்னும் படம் எடுத்து கொண்டு இருக்கிறது. என் ஐயா பெயரில் உள்ளது. அதனால் எல்லாம் நல்ல தானா போகுது. அப்புறம் ஏன் இந்த முடிவு!

ஐயா குடும்பத்துக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம். மதன் இவர் பையனா? இவர் ஏன் மதனுக்கு என் முதலிடம் கொடுக்கிறார். ஐயாவிற்கு பிரஷர். ஆனால் என்னை விட்டுக் கொடுக்கவில்லை.

எனக்கு வந்தது என்ன? Income tax raid 6 ½ கோடி போச்சு. ஒரு பொய் என் மேல் MR. Ravi recommadationள்ள, Ravi சார் கட்சியில் வரார் Admissionக்கு மதனை வரவிட கூடாது.

கட்சியில் மதனை வெளியே கொண்டு வர வேண்டும் ஐயாவையும் மதனையும் பிரிக்கணும். ஏதோ சொத்தை என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று, கேரளா போய் பில்லி சூனியம் வர வைத்து விட்டாச்சு. எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனா கடந்த 6 மாதமாக ஐயா என்னிடம் பேசுவது இல்லை. ஃபோன் கட் பண்ணார் நேத்து கூட காசு அனுப்ப சொல்லு ரங்கபாபு சார் ஃபோன் பண்றார். சுகுமார் ஃபோன் பண்றார். நான் யாருக்கு வாழ்ந்தனோ, யாருக்கு செலவு பண்ணனோ அவர் பேசுவது இல்லை. எலெக்‌ஷனுக்கு கூப்பிடவில்லை. அதனால் இந்த முடிவு. நான் போறேன். Already இது புதுசு இல்லை Nov 30 Try பண்ணினேன் முடியல். So இப்போது நான் போறேன். என் கொளிக்கைகள் Vendhar familyக்கு மதன் போயிட்டானே SRM அவருக்கு என்ன சம்மதம் இல்லை ரவி சொல்வார். ஆனால் இந்த தடவை அது நடக்காது.

(1) 8 வருடமாக நான் SRMக்கு போட்ட student list நான் இதில் சேர்த்து இருக்கிறேன்.

(2) Vendhar movies, Vendhar TV Bank Statement connection பார்த்தால் தெரியும்.

(3) Income tax raidயில் எடுத்த Payment SRM வாங்கி உள்ளது.

(4) Vendhar TV Satellite Telecast ஆகும் படங்களில் நிறைய படங்கள் என் பெயரில் உள்ள இருக்கும். அதுக்கு எந்த ஒரு Payment நான் வாங்கி இருக்க மாட்டேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு. நான் இல்லாவிட்டால் என்ன. என் உயிர் நண்பர்கள் Pressக்கு வருவார்கள்.

நான் last ஆக கேட்பது என்னனா.

இந்த நான் அனுப்பிய list P6/U6 மாணவர்கள் எல்லாம் College சேரனும்.

அவர்களிடம் வாங்கி பணம் உங்களிடம் முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளது.

NEET வந்தால் அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கொடுக்கப்படவேண்டும்.

வேந்தர் மூவீஸ் மேல் எந்த கடனும் வர கூடாது. இதையும் மீறி நீங்கள் என் நண்பர்களோ, என் குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவும் மன்னிக்க மாட்டார். So ஐயா.. நான் உங்களை பார்க்காமல் போகிறேன் என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

இவ்வாறு வேந்தர் மூவீஸ் மதன் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

Leave a Reply