40 செமீ நீளத்தில் பாதம். கின்னஸ் சாதனை செய்த வெனின்சுலா நபர்
[carousel ids=”73625,73624,73623,73622,73621,73620,73619,73618,73617″]
வெனின்சுலா நாட்டை சேர்ந்த 20 வயது ஜெயசன் (Jeison Rodriguez) ஒருவர் உலகிலேயே மிக நீளமான பாதங்களை பெற்றவர் என்ற கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது.
7 அடி 3இன்ச் உயரமுள்ள இவருடைய வலது பாதம் 40.1 செமீ நீளமும், இடது பாதம் 39.6 செமீ நீளமும் உள்ளது. இவருடைய ஷூ சைஸ் 32 என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்காகவே பிரத்யேகமாக ஷூ செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் துருக்கியில் வாழும் சுல்தான் கோசன் என்பவர் 8 அடி 3இன்ச் உயரத்தில் இருந்தாலும் அவருடைய ஷூ சைஸ் 28ஆகவே இருந்தது. ஆனால் ஜெய்சன் 7 அடி 3 இன்ச் உயரம் இருந்தாலும் ஷூ சைஸ் 32 ஆக உள்ளதால் இவர் கின்னஸில் இடம்பெற்றுள்ளார்.
தற்போது கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் இவருக்கு பேஸ்கட் பால் வீரராக வேண்டும் என்று விருப்பமாம். இவருடைய உயரத்திற்கு ஏற்ற விளையாட்டைத்தான் இவர் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.