கருப்பின இன தலைவர் ஒபாமாவின் ஆட்சியில் இனவெறி தாக்குதலா? வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

veninzulaஅமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பொறுப்பேற்ற பின்னர்தான் அந்நாட்டில் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றஞ்சாட்டி உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையினர்களே கருப்பினர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக கறுப்பின இளைஞர்கள் மீது வெள்ளைக்கார போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். இதனால் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அமெரிக்காவில் அதிகரித்து வரும்  இனவெறி தாக்குதல்கள் குறித்து வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”அமெரிக்காவில் ஜனாதிபதியாக ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு தான் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு  கறுப்பின தலைவரின் கீழ் நடைபெறும் ஆட்சியில் இந்த தாக்குதல்கள் நடப்பது உண்மையிலேயே வியப்பாக உள்ளது.

இதை சொல்வதற்கு நான் வருந்துகிறேன். காரணம், நான் அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன். அமெரிக்காவில் உண்மையான சக்திகளின் பிணைக் கைதியாக ஒபாமா இருப்பதாக நினைக்கிறேன். ஒபாமா சோர்வடைந்து, வெறுமையுடன் காணப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருடைய கட்சியின் படுதோல்வி இதை நிரூபிப்பதுபோல் உள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply