விஜய், காஜல் அகர்வால் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதால் அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவுகிறது. இந்த படத்தில் நடிக்க இளையதலைமுறை தெலுங்கு நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜில்லா தெலுங்கு ரீமேக் உரிமையை “வீரு பொட்லா” என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தில் வெங்கடேஷ் மற்றும் ரவிதேஜாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். விஜய் வேடத்தில் மகேஷ்பாபு அல்லது ரவிதேஜாவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகேஷ்பாபு ஏற்கனவே இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இந்த வாய்ப்பு ரவிதேஜாவுக்குத்தான் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க தமன்னா, இலியானா, ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம் தமிழில் நடித்த காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் பூஜை ஆகஸ்ட் 15ல் நடைபெறும் என கூறப்படுகிறது.