வெந்தைய கீரை – ஒரு கட்டு
துவரம் பருப்பு – நான்கு கை அளவு
நடுத்தரமான வெங்காயம் – 1
நடுத்தரமான தக்காளி – 1
பச்சை மிளகாய் – 10 எண்ணிக்கை
புளி – ஒரு எலுமிச்சை அளவு
கருவேப்பிலை- சிறிதளவு
மஞ்சள் – 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
மல்லி இலை- சிறிதளவு
செய்யும் முறை:வெந்தைய கீரையை கழுவி, இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும், தண்டினை அகற்றி விடவும். குக்கரில் துவரம் பருப்பு, வெந்தைய கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புளி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 250 மில்லி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.
நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும். பிறகு நீராவி அழுத்தம் அடங்கும் வரை காத்திருக்கவும். (10-15 நிமிடம்) பிறகு சமையல் கலனை திறந்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
மத்து அல்லது மசிக்கும் கட்டை கொண்டு நன்றாக கொதித்த கரைசலை மசிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை சேர்க்கவும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும், கருவேப்பிலை சேர்க்கவும். (தாளிப்பதற்கு வேறு ஏதேனும் தாங்கள் பயன்படுத்த விரும்பினால் அதையும் சேர்க்கலாம்) ஒரு நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கவும். சுவைக்கு சிறிது மல்லி இலைகளை சேர்த்து கொள்ளுங்கள்.சுவையான வெந்தைய கீரை மசியல் தயார்.