அஜீத்தின் பெரிய மனசு யாருக்கும் வராது. எம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த நடிகர் புகழாரம்
எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர்களோடு நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். கதாநாயகன், குணசித்திர வேடம், வில்லன் என பல பரிணாமங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரது மகன் அருண்விஜய்க்கு பிரேக் ஏற்படும் வகையில் ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அஜீத்துடன் அருண்விஜய் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அருண்விஜய்யை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.
சமீபத்தில் அருண்விஜய் ஆரம்பித்துள்ள புதிய படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் பேசிய விஜயகுமார், ‘நான் போகிற இடங்களிலெல்லாம் எல்லாத் திறமைகளும் இருந்தும் அருண்விஜய்க்கு ஒரு ப்ரேக் கிடைக்கவில்லையே என்று எல்லோரும் கேட்பார்கள், அவருடைய திறமைகளை ஓவர்நைட்டில் என்னைஅறிந்தால் படத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்தார் இயக்குநர் கௌதம்மேனன்.
இன்றைக்கு எல்லோரும் அந்தப்படத்தில் வந்த விக்டர் (என்னைஅறிந்தால் படத்தில் அருண்விஜய்யின் பெயர்) கேரக்டர் பற்றிப் பேசுகிறார்கள். நான் ஐம்பத்தியாறு ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன், எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட எல்லோரோடும் நடித்திருக்கிறேன்.
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், என்னைஅறிந்தால் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார் என்றதும், எனக்காக அவருடைய வேடத்தில் எந்தவிதத்திலும் மாற்றம் வேண்டாம் கதையில் அவருடைய கேரக்டர் எவ்வளவு இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார் அஜித்.
இப்படிச் சொல்ல பெரியமனசு வேண்டும், அதற்காக அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.