இதுதான் கடைசி திரைப்படம். விஜய்யிடம் எஸ்.ஏ.சி உறுதி.

vijay and sacபிரபல தமிழ்ப்பட இயக்குனரும் இளையதளபதி விஜய் அவர்களின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது “டூரிங் டாக்கீஸ்” என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, தற்போது இயக்கி வரும் “டூரிங் டாக்கீஸ்” படத்துடன் தான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்தார்.

இதுவரை 68 திரைப்படங்களை இயக்கியுள்ள எஸ்.ஏ.சி, தற்போது இயக்கி வரும் திரைப்படம் 69 வது படம் என்றும், இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் தேனியில் நடக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விஜய்காந்த் இவரது இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, வெற்றி போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான “நான் சிகப்பு மனிதன்” இவரது இயக்கத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தனது தந்தையின் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின்னர்தான் வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தனது ஓய்வு முடிவு குறித்து தனது மகன் விஜய்யிடம் தெரிவித்துவிட்டதாகவும், விஜய் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறிய எஸ்.ஏ.சி, ஓய்வுக்கு பின்னர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளதாகவும் கூறினார். மேலும் விஜய் தற்போது நடித்து வரும் கத்தி திரைப்படம் குறித்து தேவையில்லாத வதந்திகள் அதிகம் வெளிவருவதாகவும், அவ்வாறு வதந்தி வெளியிடுபவர்களை தான் எச்சரிப்பதாகவும் கூறிய எஸ்.ஏ.சி, திட்டமிட்டபடி தீபாவளிக்கு “கத்தி” திரைப்பட்ம் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply