பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மரணம்.

பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மரணம்.

ksgபிரபல இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. கற்பகம், குலமா குணமா, பணமா பாசமா, செல்வம், ஆயிரம் ரூபாய், ஆதி பராசக்தி, தேவியின் திருவிளையாடல், கை கொடுத்த தெய்வம், சித்தி உள்பட சுமார் 50 படங்களை இயக்கிய மாபெரும் இயக்குனரின் மறைவு கோலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், அசோக், குமார், ரவி, ராஜ்குமார், துரை என்ற 6 மகன்கள் உள்ளனர். இவர்களில் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்,  என ஆறு மகன்கள் உள்ளனர். இவர்களில் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் என்பவர் மட்டும் ஆசையில் ஓர் கடிதம் மற்றும் சதுரங்க வேட்டை உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், உடல் இன்று மாலை இறுதிச்சடங்கு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply