வெற்றி தரும் இலை எது?

Battle-of-Kurukshetra-Manuscript-Illustration

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.  இது முதலில் மலேசியாவில்தான் தோன்றியது. பிறகு இந்தியாவிலும் இந்தோனேஷியாவிலும் அதிகம் பயிரிடப் படுகிறது.  இது பயிராகும் இடத்தை வெற்றிலைக் கொடிக்கால் என்று சொல்வார்கள்  தமிழ் நாட்டில் கும்பகோணம்  தஞ்சாவூர்  வெற்றிலைக்கு மிகவும் பிரசித்தமான ஊர்கள் . கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலையை ஆண் வெற்றிலை என்றும்  இளம்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலையை பெண் வெற்றிலை என்றும் சொல்வார்கள்.

வெற்றிலை சுப காரியங்களில் முதலிடம் பெறுவதுடன் மாமருந்தும் ஆகும். நாகவல்லி  புஜங்கலதா என்றும் இதைக் கூறுவார்கள்.  புஜங்கலதா என்பதன் பொருள் “எதையும் செய்யும்” என்பதாகும்.

வெற்றிலையை சூடுபடுத்தி நெற்றியில் வைத்திருக்க ஈரத்தால் வரும் தலைவலி நீங்கும்.  கடுமையான வயிற்றுவலிக்கு ஒரு வெற்றிலையில் ஐந்து மிளகு வைத்து மென்றுச் சாப்பிட உடனடியாக வலி நீங்கும். வெற்றிலையுடன் ஐந்து மிளகு ஒரு கல் உப்பு வைத்து மென்று சாப்பிட பாம்பு குழவி வண்டுக்கடி விஷம் நீங்கும்.  வெற்றிலைச் சாருடன் அரிசி திப்பிலி சேர்த்து அரைத்து வடிகட்டி சம அளவு தேன் கலந்து கொள்ளவும்  காலை  மாலை சாப்பிட மூளை  இதய சம்பந்தமான நோய் தீரும். 

துளசி  வெற்றிலை இஞ்சி மிளகை சம அளவு எடுத்து அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் மற்றும் சளித்தொல்லை நீங்கும்.  வெற்றிலையை வெற்று  இலை என்று இலேசாக நினைத்துவிட முடியாது. வெற்றிலைக்கு வாய்  புற்று தொண்டைப் புற்று இரத்தப் புற்று நோயை நீக்கும் ஆற்றலும் உண்டு. சித்த மருத்துவத்தின்படி  இது 17 விதமான மருத்துவ குணங்களைக் கொண்டதாகும்.

images

வெற்றிலையில் புரதச் சத்துடன்  இரும்பு சத்து  கால்ஷியம் சத்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி தரும் “சவிக்கால்” என்ற வேதிய பொருளும் இருப்பதாக சமீப ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

தாம்பூலம் தரிப்பது என்பது கூட நமது பாரம்பரிய வழக்கம் தான். சரியான அளவில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேரும்போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன

வெற்றிலையின் நுனியில் மகாலஷ்மியும்  நடுவில் சரஸ்வதியும் அடியில் பார்வதியும் இருப்பதாக சொல்வார்கள்  அதனால்தான் இறைவனுக்கு நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு இரண்டும் சமர்ப்பிக்கப்படுகிறது   சுப காரியங்களிலும்  விருந்தினர்கள் வந்தாலும் வெற்றிலை பாக்கு கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பார்கள். வெற்றிலையை வாட விடுவது சுபமல்ல.  மகிமை மிக்கதும் மங்கலகரமானதுமான வெற்றிலை வெற்றியின் அடையாளமாகவே கருதப் படுகிறது.

Leave a Reply