ஜனவரி 1 முதல் மதமாற்றம் தீவிரமாக தொடரும். விஸ்வ இந்து பரிஷத்

religion changeஇந்து மதத்தில் இருந்து மாற்று மதங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவோம் என்று  கேரள மாநில விஸ்வ இந்து பரிஷத்  அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பார்கவா ராம், திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்ளுக்கு தெரிவித்தபோது, “பல்வேறு மதங்களில் இருந்து இந்து மதத்துக்குத் திரும்பும் நிகழ்ச்சியை கேரளாவில் ஜனவரி 1ஆம் தேதி தொடங்க உள்ளோம். ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தாய் மதத்துக்குத் திரும்புவது என்பது புதிய விஷயமல்ல.

அதே நேரத்தில் நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இந்து மதத்துக்கு மாறுங்கள் என்று வலியுறுத்தப்போவதில்லை.இந்து மதத்துக்கு மாற விரும்பும் மற்ற மதத்தவர்கள் எங்களுக்கு தகவல் கொடுத்தால் மட்டுமே வி.எச்.பி. உதவும். இந்து மதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதும் தடுக்கப்படும்.

கேரளத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலர், சமீபத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்துக்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply