விசுவ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் கிரிராஜ் கிஷோர் நேற்றிரவு 9.15 மணிக்கு திடீரென மரணம் அடைந்தார். டெல்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள விசுவ இந்து பரிஷத்தின் தலைமை அலுவலகத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 94. வெகுகாலமாக உடல்நலம் இன்றி இருந்த கிரிராஜ் கிஷோர், பல ஆண்டுகளாக சில ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் தன் வாழ்வை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இணைந்து பணியாற்றிய கிர்ஷோ, அதன் முக்கிய பிரசார தலைவராக திகழ்ந்தார். ராமர் கோவில் போராட்டத்தில் கிஷோர் மிக தீவிரமாக ஈடுபட்டார். அவர் தனது உடலை தானமாக ஏற்கனவே எழுதிக் கொடுத்துள்ளார். அதனால் அவரது உடலில் உள்ள முக்கிய பாகங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கடைசிவரை திருமணம் செய்யாமல் விசுவ இந்து பரிஷத்தின் வளர்ச்சிக்காகவே பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.
கிரிராஜ் கிஷோர் மறைவு குறித்து செய்தியறிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்., தாய் நாட்டிற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் கிரிராஜ் கிஷோர் என அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் மோடி.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1tGVVlI” standard=”http://www.youtube.com/v/xECwEPSc5gk?fs=1″ vars=”ytid=xECwEPSc5gk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep8779″ /]