மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைந்தால் கைது செய்வோம். பிரவீண் தொகாடியாவுக்கு எச்சரிக்கை

thogadiaவிஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா அவர்கள் மேற்கு வங்காள மாநிலத்திற்குள் நுழைய அம்மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா நடத்திய பிரமாண்டமான பேரணியை அடுத்து மதமாற்ற நிகழ்ச்சியை நடத்திய விஸ்வ இந்து பரிஷத், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தை தழுவிய 20 நபர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றியது. மேலும், அந்த நிகழ்ச்சியில் ஆத்திரமூட்டும் வகையில் தொகாடியா பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு டின்ஜாபூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா நடத்தவுள்ள மற்றுமொரு பேரணி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மேற்குவங்க மாநிலத்திற்குள் இன்று காலை முதல் தொகாடியா நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறி அவர் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் மேற்கு வங்க அரசு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், தொகாடியா தங்கள் மாநிலத்திற்குள் வந்தால், மாநிலத்தில் மதக்கலவரம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என மேற்கு வங்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே

கர்நாடகா, அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply