வயாக்ரா மாத்திரைகள் வாங்கியதால் பதவியை இழக்கும் அதிபர்

வயாக்ரா மாத்திரைகள் வாங்கியதால் பதவியை இழக்கும் அதிபர்

1அரசு பணத்தில் 400 வயாக்ரா மாத்திரைகளை வாங்கியதாகவும், 40 ஆண்டு தோழியின் தொண்டு நிறுவனத்தின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தென்கொரிய அதிபர் பார்க் குன் ஹை மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கள் வைத்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை தென் கொரிய அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

அதிபர் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வதால் அவருக்கு ஏற்படும் உடல்நலக்குறைவுகளை சரிசெய்யவே வயாக்ரா மாத்திரைகளை அவர் வாங்கியதாகவும், ஆனால் இந்த மாத்திரைகள் அனைத்தும் அரசு பணத்தில் வாங்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் இவரது விளக்கத்தை பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் நம்பவில்லை. அதிபருக்கு எதிரான போராட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது.

மேலும் அதிபரின் 40 ஆண்டுகால தோழி சோய் சூன் சில் என்பவருக்கு அரசின் பல்வேறு அதிகாரங்களை பயன்படுத்த அதிபர் அனுமதி அளித்ததாகவும், இதனால் அதிபர் பதவி விலகும்வரை போராட்டம் ஓயப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் சூளுரைத்துள்ளன.

Leave a Reply