ஆண்களின் கண்பார்வையை பறிக்கும் வயாகரா மாத்திரை

viyagra

வயாகரா போன்ற பாலியல் ஊக்க மாத்திரைகளிலுள்ள மருந்து உள்ளடக்கமானது ஆண்களின் பார்வையை நிரந்தரமாக பாதித்து அவர்களுக்கு குருட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம் என அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த மருந்து உள்ளடக்கமானது ஏற்கனவே பரம்பரை ரீதியாக விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களின் பார்வையை நிரந்தரமாக பாதித்து குருட்டுத்தன்மையை ஏற்படுத்துவதுடன் கண் பிரச்சினைகளை தோற்றுவிப்பதுடன் தொடர்புடைய மரபணுவொன்றை கொண்ட சாதாரண பார்வையுடையவர்களையும் பாதிக்கிறது.

மேற்படி மருந்து விழித்திரையிலிருந்து மூளைக்கு ஒளியை கடத்துவதற்கு அவசியமான நொதியத்துக்கு தடையை ஏற்படுத்துகிறது. மேற்படி பார்வைக் குறைபாடுக்கான மரபணு பிரச்சினையால் உலகில் 50 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எலிகளில் மேற்படி பாலியல் ஊக்க மாத்திரைகளை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் வயாகரா உள்ளடங்கலான பாலியல் ஊக்க மருந்துகள் தொடர்பில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் அவை செவிட்டுத்தன்மை மற்றும் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றன.

வயாகரா போன்ற பாலியல் ஊக்க மாத்திரைகளிலுள்ள மருந்து உள்ளடக்கமானது ஆண்களின் பார்வையை நிரந்தரமாக பாதித்து அவர்களுக்கு குருட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம் என அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த மருந்து உள்ளடக்கமானது ஏற்கனவே பரம்பரை ரீதியாக விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களின் பார்வையை நிரந்தரமாக பாதித்து குருட்டுத்தன்மையை ஏற்படுத்துவதுடன் கண் பிரச்சினைகளை தோற்றுவிப்பதுடன் தொடர்புடைய மரபணுவொன்றை கொண்ட சாதாரண பார்வையுடையவர்களையும் பாதிக்கிறது.

மேற்படி மருந்து விழித்திரையிலிருந்து மூளைக்கு ஒளியை கடத்துவதற்கு அவசியமான நொதியத்துக்கு தடையை ஏற்படுத்துகிறது.

மேற்படி பார்வைக் குறைபாடுக்கான மரபணு பிரச்சினையால் உலகில் 50 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எலிகளில் மேற்படி பாலியல் ஊக்க மாத்திரைகளை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வயாகரா உள்ளடங்கலான பாலியல் ஊக்க மருந்துகள் தொடர்பில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் அவை செவிட்டுத்தன்மை மற்றும் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றன.

Leave a Reply