மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் துணை ஜனாதிபதி

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் துணை ஜனாதிபதி

இந்திய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக வெங்கையா நாயுடு கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய 3 வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.

நேற்று டெல்லியில் இருந்த கிளம்பிய துணை ஜனாதிபதி ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மத்திய இணை மந்திரி ஜஷ்வந்த் சிங் பாபோர் ஆகியோர்கள் சென்றுள்ளனர். இந்த பயணத்தின் போது கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை அதிபர் தஜாபத் கேப்ரெரா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதன்பின்னர் பனாமா நாட்டுக்கு செல்லும் வெங்கையா நாயுடு, பனாமா அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்வதோடு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடவுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாவது கட்ட பயணமாக பனாமாவில் இருந்து பெரு நாட்டுக்கு செல்லும் வெங்கையாநாயுடு பெரு நாட்டின் ஜனாதிபதி மார்டின் விஸ்காரா, துணை ஜனாதிபதி மெர்சிடஸ் அரோஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

Leave a Reply