விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை. டெல்லி ஐகோர்ட் உத்தரவு

விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை. டெல்லி ஐகோர்ட் உத்தரவு

vicks action 500பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரையில் நோயை குணமாக்கும் சக்தி இல்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள் அதில் கலந்திருப்பதாகவும் கூறி சமீபத்தில் அந்த மாத்திரையை மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த தடைக்கு டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

மார்ச் 10ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் விக்ஸ் ஆக்‌ஷன் 500, கோரக்ஸ் உள்பட 300 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து விக்ஸ் ஆக்‌ஷன் 500 மருந்தை தயாரிக்கும் ப்ராக்டர் அண்டு கேம்பிள் (P&G) நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ராஜீவ் சகாய் முன்பு வந்தது. அப்போது, மத்திய அரசின் உத்தரவிற்கு மார்ச் 21ஆம் வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தடையை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மற்ற மருந்து நிறுவனங்களின் வழக்குகளையும் ஒன்றாக இணைத்து வரும் 21ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என தெரிகிறது.

கோரக்ஸ் சிரப் மற்றும் அப்போட் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களும் மத்திய அரசின் தடைக்கு எதிராக நீதிமன்றம் மூலம் இடைக்கால தடையை ஏற்கனவே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Today News: Vicks Action 500 Extra, Phensedyl Sales To Resume

Leave a Reply