ஜப்பான் பணயக்கைதியின் தலை துண்டிப்பு. தொடரும் தீவிரவாதிகளின் வெறிச்செயல்.

japan hostageஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவரை கடத்தி அவரை விடுவிக்க பல கோடி ரூபாய் பணயத்தொகை கேட்டு மிரட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இன்று அவரது தலையை வெட்டி கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது.

நேற்று பணயக்கைதி கெஞ்ச்சீ கோட்டாவோஇன் தாயார் தன்னுடைய மகனை விடுவிக்குமாறு தீவிரவாதிகளிடம் கேட்டுக்கொண்ட நிலையிலும் இரக்கமின்றி வழக்கம்போல தங்கள் தலைவெட்டும் கைவரிசையை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் நிறைவேற்றியுள்ளனர்.

தலைவெட்டி கொலை செய்யப்பட்ட ஜப்பானியர் ஒரு பத்திரிகையாளர் என்றும் சிரியாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தபோது கடந்த சில மாதங்களுக்கு முன் தீவிரவாதிகளிடம் பிடிபட்டார் என்பது தெரிந்ததே. தீவிரவாதிகள் ஜப்பான் பத்திரிகையாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்த வீடியோ ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளில் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply