வீடியோகான் நிறுவனம் அதன் புதிய Z55 கிரிப்டன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே Z55 டிலைட் மற்றும் Z55 டாஷ் ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தைய பதிப்பை போன்றே ஒரே மாதிரியாக குறிப்புகளை கொண்டுள்ளது, எனினும் இதில் சிறந்த கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட வீடியோகான் Z55 கிரிப்டன் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குகிறது. வீடியோகான் Z55 கிரிப்டன் ஸ்மார்ட்போனில் டிராகன்ட்ரெயில் எக்ஸ் கிளாஸ் உடன் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. வீடியோகான் Z55 கிரிப்டன் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
இந்த கைப்பேசியின் சிறப்பம்சமாக 2200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத் 4.0, 3ஜி, ஜிஎஸ்எம், 4ஜி எல்டிஇ, FM ரேடியோ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இந்த கைப்பேசி கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது.
இந்த வீடியோகான் Z55 கிரிப்டன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக, அவசரக்காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்காக V-Safe அப்ளிக்கேஷன் ஏற்கனவே ஏற்றப்பட்டு வருகிறது. மற்றும் வி-சென்யூர் ஆண்டிவைரஸ் அப்ளிக்கேஷன் 90 நாட்களுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது.