வீடியோகானின் புதிய அறிமுகம்

videocon_2302267f

வீடியோகான் நிறுவனம் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. இன்பினியம் இசட்40 கியூ ஸ்டார் மற்றும் இன்பினியம் இசட் 50 கியூ ஸ்டார் ஆகிய இந்த இரண்டு போன்கள் ரூ.4,499 மற்றும் ரூ.5,999 ஆகிய விலையில் அறிமுகமாகியுள்ளன. ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் இவை இயங்குகின்றன. இசட்40 கியூ ஸ்டார் 4 இன் டிஸ்பிலே, 4ஜிபி நினைவுத்திறன், மற்றும் இரட்டை காமிரா கொண்டிருக்கிறது. இசட் 50 கியூ ஸ்டார் 5 இன் டிஸ்பிலே, கூடுதல் பேட்டரி திறன், புளுடூத் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. வெள்ளை, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்க உள்ளது.

Leave a Reply