உலக அளவில் மக்கள் வாழ ஏற்ற நகரம் எது? சென்னைக்கு எத்தனையாவது இடம்?
உலக அளவில் மக்கள் வாழ்வதற்கு உகந்த இடம் எது என்பது குறித்த பட்டியல் ஒன்றை மெர்ஜர் என்ற நிறுவனம் கடந்த சில நாட்களாக எடுத்து வந்த நிலையில் தற்போது அந்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற இடமான ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா இடம் பெற்றுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச், நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து, ஜெர்மனியின் மூனிச் நகரம், கனடாவின் வான்கூவர் நகரம் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை பொதுமக்கள் வாழ சிறந்த நகரமாக ஐதராபாத் நகரம் தேர்வாகியுள்ளது. இருப்பினும் உலக அளவில் இந்த நகரம் 139வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தை அடுத்து புனே 144வது இடத்திலும், பெங்களூர் 145வது இடத்திலும் சென்னை 150வது இடத்திலும், மும்பை 152வது இடத்திலும் கொல்கத்தா 160வது இடத்திலும் உள்ளது.
ஆசிய கண்டத்தை பொறுத்தவரை பொதுமக்கள் வாழ சிறந்த இடமாக சிங்கப்பூர் தேர்வு பெற்றுள்ளது. மேலும் சிங்கப்பூர் உலக அளவில் 26வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.