பைக்கில் வந்தவரை காலால் எட்டி உதைத்த டிராபிக் போலீஸ் சஸ்பெண்ட்
https://www.youtube.com/watch?v=RGzSSDHPC3o
தவறான பாதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை டிராபிக் போலீஸ் ஒருவர் காலில் எட்டி உதைத்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அந்த போலீஸார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்தது இந்தியாவில் அல்ல, வியட்நாம் நாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாம் நாட்டில் சமீபத்தில் டிராபிக் காவல்துறை அதிகாரி ஒருவர் பணியில் இருந்தபோது தவறான பாதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவதை பார்த்தார். உடனே அவர் வேகமாக ஓடி வந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை காலால் உதைத்தார். இதனால் நிலை தடுமாறிய அந்த நபர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விழித்து கொண்ட வியட்நாம் அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட டிராபிக் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.