விஜய் 59″ படப்பிடிப்பில் திடீர் மாற்றம்.

vijay 59விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி இசை, கிராபிக் காட்சிகள் ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தன்னுடைய பணிகளை விஜய் முழுவதுமாக முடித்துவிட்டாராம்.

எனவே விஜய் தனது மனைவி, குழந்தைகளுடன் விரைவில் லண்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் விஜய் குழந்தைகளுக்கு வரும் ஜூலை 1 முதல்தான் பள்ளி திறக்கவுள்ளது. எனவே இந்த இடைப்பட்ட நாட்களை விஜய் லண்டனில் கழிக்க முடிவு செய்துள்ளார்.

விஜய் மனைவி சங்கீதாவின் சொந்த ஊர் லண்டன் என்பதால் ஒவ்வொரு வருடமும் விஜய் லண்டனுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த விஜய் 59″ படத்தின் படப்பிடிப்பு முதலில் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விஜய் திடீரென லண்டன் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதால் அவர் திரும்பி வந்தவுடன் உடனே மீண்டும் வெளிநாடு செல்வது கடினம் என்பதால் படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் 59″ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தவும், பின்னர் ஒருமாதம் கழித்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சீனாவில் நடத்தவும் படக்குழுவினர் தற்போது திட்டத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன் மற்றும் பலர் நடிக்கவுள்ள விஜய் 59″ படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply