சென்னை மழையை பயன்படுத்தி கொண்ட ‘விஜய் 59’ படக்குழு

சென்னை மழையை பயன்படுத்தி கொண்ட ‘விஜய் 59’ படக்குழு
vijay59
விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஐந்து நாட்களாக அடாத மழையிலும் விடாது நடந்து வருகிறது. இதுகுறித்து படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘விஜய் 59’ படத்தின் கதைப்படி மழையில் ஒரு சண்டைக்காட்சி இருக்கின்றதாம். இந்த காட்சிக்கு வழக்கம்போல் செயற்கை மழையில் படமாக்க அட்லி முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் தற்போது உண்மையிலேயே மழை பெய்வதால் இந்த மழையை பயன்படுத்தி உண்மையான மழையில் படப்பிடிப்பு நடத்தலாம் என முடிவு செய்தாராம்.

இதற்கு விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஒப்புக்கொண்டதால் அனைவரும் மழையில் நனைந்தபடியே சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்த சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக வந்துள்ளதாகவும், ஸ்க்ரீனில் பார்க்கும்போது விஜய் ரசிகர்களுக்கு இந்த சண்டைக்காட்சி ஒரு புது அனுபவமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி.பிக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

English Summary: Vijay 59′ team used the Chennai rain

Leave a Reply