எம்.ஜி.ஆரின் பாடல்களை விஜய் பயன்படுத்துவது ஏன்? திடுக்கிடும் தகவல்கள்
இளையதளபதி விஜய் ‘புலி’ படத்தை அடுத்து நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் கோவாவிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சீனாவிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் விஜய் இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் ரசிகராக நடித்துள்ளதோடு, எம்.ஜி.ஆர் பாடல்களின் வரிகளையும் உபயோகித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே தலைவா படத்தில் ‘Time to Lead” என்ற ஒரே ஒரு லைனுக்காக அந்த படம் ரிலீஸாவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் சில கொள்கை பாடல்களை தேடிப்பிடித்து இந்த படத்தில் பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை கைப்பற்ற எடுத்து வரும் முயற்சிகளுக்கு நடுவே மறுபுறம் பிரபல அரசியல் தலைவரான எம்.ஜி.ஆரின் பாடல்களை விஜய் தேர்வு செய்தது பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தேர்தல் நெருங்கவுள்ளதால் விஜய் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிவிட்டார் என்பதற்கு பிள்ளையார் சுழிதான் இந்த எம்.ஜி.ஆர் பாடலை தன்னுடைய படத்தில் இணணப்பது என்று கூறப்படுகிறது. விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளும் கூர்ந்து நோக்கத்தொடங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது.