விஜய் படத்திற்கு எதிராக போட்டியிடும் விஜய் படம்
இளையதளபதி விஜய் நடிப்பில் ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கி வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் 3 மாத போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளுக்கு பின்னர் இந்த படம் வரும் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்து வரும் இந்த படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படமும் 2017 பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது
சிரஞ்சீவி, காஜல் அகர்வால் இருவருமே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும், தமிழில் டப் செய்தும் வெளியாகவுள்ளதாக கூறப்படுவதால் ‘விஜய்யின் ‘விஜய் 60’ படத்திற்கு போட்டியாக அவருடைய படத்தின் ரீமேக்கே அமைந்துள்ளதாக பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.