ராஜஸ்தான் வெயிலையும் தாண்டி நான் மகிழ்ச்சியாக உள்ளேன். விஜய் 61 பட நடிகை
இளையதளபதி விஜய் மூன்று வித்தியாசமான வேடங்கலில் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக இந்த படத்தின் நாயகிகலில் ஒருவரான நித்யாமேனன் இன்று ஜெய்சல்மர் சென்றார்
அங்கு விமான நிலையத்தில் பேட்டியளித்த நித்யாமேனன், ‘விஜய் 61′ படத்திற்காக ஒரு பாடல் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். இங்கு வெயில் மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் இந்த இடத்தை நான் மிகவும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள அரண்மனை உள்பட பல முக்கிய இடங்களில் விஜய்-நித்யாமேனன் பாடல் காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் ஒரு அதிரடி சண்டைக்காட்சியும் படமாக்கப்படவுள்ளதாம்.