‘விஜய் 61’ படத்தின் டைட்டில் ‘மூன்று முகம்’?
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘விஜய் 61’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் நாளை முதல் விஜய் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவரவுள்ள டைட்டிலை வரவேற்க விஜய் ரசிகர்கள் தற்போதே தயாராகிவிட்டனர்.
விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பதால் ‘மூன்று முகம்’ டைட்டிலா? அல்லது விஜய், ரஹ்மான், அட்லி என மூன்று பிரபலங்கள் இணைந்திருப்பதால் ‘மூன்று முகம்’ டைட்டிலா? என்ற கேள்விக்கான விடையை ரசிகர்களிடமே விட்டுவிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.