அஜீத்தை அடுத்து மீண்டும் அப்பாவானார் விஜய்?

vijayஅஜீத் சமீபத்தில் ‘குட்டித்தல’க்கு அப்பாவானது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஏற்கனவே விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் இருக்கும் நிலையில் அவர் விரைவில் மீண்டும் அப்பாவாக போவதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இம்முறை அப்பாவாக மாறுவது நிஜத்தில் அல்ல. அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அட்லி விறுவிறுப்பாக கவனித்து வரும் நிலையில் விஜய் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றது.

ஏற்கனவே விஜய் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் அப்பா கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய் ஏற்கனவே வில்லு, ப்ரியமானவளே, காவலன் போன்ற படங்களில் அப்பாவாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் அப்பா-மகன் உறவை வலுப்படுத்தும் கேரக்டர்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கவுள்ளனர். விஜய்க்கு அப்பா கேரக்டர் என்றால் இந்த இருவரில் ஒருவருக்கு அம்மா கேரக்டர் அமையும் என்பதால் யார் அம்மா கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது சஸ்பென்ஸ்ஸாக உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply