யாருக்கு ஓட்டு போடவேண்டும். ரசிகர்களுக்கு விஜய்யின் அட்வைஸ்

யாருக்கு ஓட்டு போடவேண்டும். ரசிகர்களுக்கு விஜய்யின் அட்வைஸ்
vijay salary
இளையதளபதி விஜய் கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியிலும், 2011-2016 வரையிலான அதிமுக ஆட்சியிலும் பல இன்னல்களை சந்தித்துள்ளார். அவரது பல படங்களின் ரிலீசின்போது இரு அரசுகளும் செய்த இடைஞ்சல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

இந்நிலையில் இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை விஜய் தெளிவாக விளக்கி, பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து நேற்று இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆனந்து அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்த கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைபாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே இளையதளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்து கொள்கிறேன். இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply