மூன்று முகம் ரீமேக்கில் நடிப்பது யார்? அஜீத், விஜய் இடையே கடும்போட்டி.

moondru mugam copyகடந்த 1983ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மூன்று முகம். இந்த படத்தின் ரீமேக் உரிமையை தற்போது ‘ஜிகர்தண்டா’ படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் பெற்றுள்ளார். இந்த படத்தின் ரீமேக்கில் அஜீத், விஜய் அல்லது கார்த்தியை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜான் ஆகிய மூன்று வேடங்களில் ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் நடித்த்ருந்தனர். தற்போது இதன் ரீமேக் உரிமையை பெற்றுள்ள தயாரிப்பாளர் கதிரேசன் இந்த படத்தில் பெரிய நடிகர்கள் யாராவது நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

அஜீத் அல்லது விஜய் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதே இவரது விருப்பம். இவர்கள் இருவரது கால்ஷிட் கிடைக்காத பட்சத்தில் மூன்றாவதாக அவர் கார்த்தியை தேர்வு செய்துள்ளார். அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரிடமும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இருவருமே இந்த படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த படத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஃபேஸ்புக்கில் கருத்து கேட்கப்பட்டதாகவும் அதற்கு அருண் மற்றும் ஜான் ஆகிய இரண்டு கேரக்டர்கள் விஜய்க்கு பொருத்தமாக இருந்தாலும் அலெக்ஸ் பாண்டியன் வேடம் விஜய்க்கு சரிப்பட்டு வராது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று வேடத்திற்கும் பொருத்தமான ஒரே நடிகர் அஜீத்தான் என்றும் பலர் கருத்து கூறியுள்ளனர். மேலும் கார்த்தியை இந்த படத்தில்நினைத்து பார்ககவே முடியாது என்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply