தமிழ் திரையுலகில் வெற்றி நாயகர்களாக விளங்கி வரும் அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தொழிலில் போட்டி இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பவதை அவ்வபோது நிரூபித்து வந்துள்ளனர். அதேபோல், இவர்களது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளுடன் மோதிக்கொண்டாலும், பொதுப்பிரச்சனை என்ற ஒன்று வந்துவிட்டால் இரு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவர்கள். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் நடந்திருந்தபோதிலும், சமீபத்தில் இதுபோன்ற ஒருசம்பவம் நடந்துள்ளது.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க ஐ.நா.மன்றம் ஒரு மில்லியன் வாக்குகளை கேட்டுள்ளது. அதாவது 10 லட்சம் வாக்குகள் தேவை. தமிழகம் உள்பட உலகில் சுமார் 10 கோடி தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இதுவரை சுமார் எட்டு லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
இதற்கு ஒரே காரணம் இதுகுறித்து தமிழர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதுதான். ஆனால் இந்த விஷயத்தை தற்போது அஜீத்-மற்றும் விஜய் ரசிகர்கள் கையில் எடுத்துள்ளனர். ஒவ்வொரு தமிழனும் இனப்படுகொலை என்பதை நிரூபிக்க உடனே வாக்களிக்க வேண்டும் என இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இவர்களது முயற்சி காரணமாக வெகுவேகமாக வாக்குகள் பதிவாகி வருவதாகவும், எதிர்பார்த்த 10 லட்சம் வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயத்தில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து செயலாற்றினால் தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.