விஜய் எங்களிடம் சம்பளத்திற்கு வேலை பார்த்த ஒரு சாதாரண நடிகர். லைகாவின் திமிர் பேச்சு

kaththi copyவிஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கத்தி’ படத்தின் பிரச்சனையை சுமூக முடிக்க விஜய் அதிரடியாக முடிவு செய்துள்ளார். அவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஆலோசனை செய்து இருவரும் இணைந்து படத்தின் உரிமையை பெற்றுவிட முடிவு செய்தார். சீமான் போன்ற தலைவர்கள் கத்திக்கு ஆதரவு கொடுத்தாலும், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸுக்கு பிரச்சனை ஏற்படும் என கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சென்னை அசோக் நகரில் உள்ள லைகாவின் அலுவலகத்திற்கு சமீபத்தில் சென்று ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் சார்பில் ஒரு முக்கிய நபர் பேச்சு நடத்தினார். இதுவரை செலவான தொகை, அதற்குரிய வட்டி மேலும் அதற்கு மேல் லாபமாக ஒரு தொகையை கொடுத்துவிட விஜய் மற்றும் முருகதாஸ் தயாராக உள்ளதாகவும் எனவே படத்தின் உரிமையை அவர்கள் இருவருக்கும் கொடுத்துவிடும்படியும் பேசியுள்ளார்.

ஆனால் அதற்கு லைகா நிறுவனத்தின் மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை. படத்தை கொடுக்க முடியாது என்று சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. அவர்கள் விஜய் மற்றும் முருகதாஸை அவமானப்படுத்தும்விதமாக, ‘விஜய்யும், முருகதாஸும் எங்களிடம் சம்பளம் வாங்கி வேலை பார்க்கும் வேலைக்காரர்கள். அவர்களுக்குரிய சம்பளத்தை பூஜை போட்ட அன்றே கொடுத்துவிட்டோம். எனவே படத்தின் உரிமை பற்றி பேச வேலைக்கார்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

கத்தி படத்தை தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகம் முழுவதும் பிரச்சனையை சமாளித்து எப்படி ரிலீஸ் செய்வது என்பது எங்களுக்கு தெரியும் என்று திமிர்த்தனமாக பேசி அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால் விஜய் மற்றும் முருகதாஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இதை சம்பவத்தை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் கொதிதெழுந்து உள்ளனர். சமுக  வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் கோபம் கடும் ஆத்திரத்தோடு தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply