மூன்றாவது முறையாக இணையும் விஜய்-முருகதாஸ்

மூன்றாவது முறையாக இணையும் விஜய்-முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இருவரும் மூன்றாவது முறையாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் தற்போது ‘பைரவா’ படத்தை முடித்துவிட்டு, அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் முருகதாஸ் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply