விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, நான் ஈ புகழ் ஸ்ரீதேவி நடித்து வரும் விஜய் 58 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்னை அருகே ஈசிஆர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.
முதலில் வீரபாண்டி கோட்டையிலே என்று தொடங்கும் பாடல் காட்சியில் விஜய் மற்றும் ஹன்சிகா நூற்றுக்கணகான நடன அழகிகளுடன் சேர்ந்து நடித்தனர். பின்னர் ஒருசில வசனக்காட்சிகளும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்புதேவனின் உதவியாளர் ஒருவர் விஜய், ஹன்சிகா காதல் காட்சி ஒன்றும், அவர்களின் காதலை எதிர்க்கும் விதமாக ஸ்ரீதேவி பேசிய வசனக்காட்சி ஒன்றும் எடுக்கப்பட்டதாகவும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதை வைத்து ஒருசில ஊடகங்கள் கதையை கணித்து செய்தி வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் காட்சிகள் குறித்து டுவிட்டரில் பதிவு செய்த நபருக்கும் சிம்புதேவனுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.