மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதும் விஷால்

மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதும் விஷால்

vijay-vishalஇளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பைரவா’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதே பொங்கல் தினத்தில் விஷாலின் ‘கத்திச்சண்டை’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டூள்ளது. ஏற்கனவே இந்த படம் நவம்பர் 18-ல் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சனையால் பொதுமக்கள் படும் அவதி காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஷால் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் ‘போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக விஜய்-விஷால் படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply