தென்னிந்திய திரைப்படங்களுக்கான சர்வதேச விருதான SIIMA விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய விருதுக்கு சமமாக இந்த விருது கருதப்படுவதால் இந்த விருதை பெற கடும்போட்டி இருக்கும். இந்நிலையில் இவ்விழா இந்த வருடம் துபாயில் வரும் ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்து பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் தேர்வு செய்யப்பட்டு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் விழாவில் விருது பெற்றவர்கள் கெளரவிக்கப்படுவார்கள்
இந்நிலையில் இந்த விருதுக்கு கடந்த வருடம் வெளியான இளையதளபதி விஜய் நடித்த கத்தி திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம், சிறந்த வில்லன், சிறந்த நடன இயக்குனர், சிறந்த சண்டைப்பயிற்சியாளர் ஆகிய எட்டு பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி (விஐபி) திரைப்படம் சிறந்த சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த நடிகை, துணை நடிகை, சிறந்த நடன அமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த காமெடி நடிகர், சிறந்த அறிமுக இயக்குனர், என 9 பிரிவுகளுக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த அறிமுக நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த வில்லன், சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த சண்டைப்பயிற்சியாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் என ஒன்பது பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விஜய் படத்தை விட தனுஷ், கார்த்தி ஆகியோர்களின் படங்கள் ஒரு பிரிவு அதிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு படமும் எத்தனை விருதுகள் பெறுகின்றன என்பதை பொறுத்தே விஜய், தனுஷ், கார்த்தியின் வெற்றி தெரியவரும்.