‘வேதாளம்’ வெற்றி பெற விஜய் ரசிகர்கள் வாழ்த்து.

‘வேதாளம்’ வெற்றி பெற விஜய் ரசிகர்கள் வாழ்த்து.
vijay fans
அஜீத் நடித்துள்ள ‘வேதாளம்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் அஜீத்துக்கு, படக்குழுவினர்களுக்கும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஜீத் ரசிகர்களுடன் எந்நேரமும் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டிருக்கும் விஜய் ரசிகர்களும், அஜீத்தின் ‘வேதாளம்’ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ‘வேதாளம்’ திரைப்படம் வெள்ளிவிழா காண வாழ்த்துகிறோம்’ என்ற பேனரை வைத்தூள்ளனர். இந்த பேனரில் அஜீத், விஜய் படங்களும் இடம்பெற்றுள்ளன.

கூட்டப்பள்ளி ரசிகர்கள் போன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள அஜீத், விஜய் ரசிகர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளத்.

Leave a Reply