பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய்யின் வளர்ச்சியை கண்டு அச்சப்பட்டு அவருடைய படங்களுக்கு தொடர்ச்சியாக பிரச்சனை செய்கிறார்கள் என்றும், இதிலிருந்தே விஜய் நன்றாக வளர்கிறார் என்பது உறுதியாகிவிட்டது என தெரிகிறது என்று கூறியுள்ளார்.
‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை தற்போது தயாரித்து இயக்கி வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது படம் குறித்து கூறும்போது, “தற்போதைய சூழலில் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, எழுபது வயது கிழவனுக்கும் வரும் காதல். வெளிநாட்டிற்கு படிக்க சென்று, இந்திய கலாச்சாரத்தை மனதளவில் மறந்து, மீண்டும் இங்கே வரும் பெண் திடீரென நடக்கும் திருமணத்தால் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் என மூன்று கதைகளின் தொகுப்புதான் இந்த ‘டூரிங் டாக்கீஸ்’. இவ்வளவு நாள் வரை சிறு, சிறு வேடங்களில் மட்டுமே நடித்த நான், இந்த படத்தில் எழுபது வயது காதல் கொள்ளும் முதியவராகவும் வருகிறேன்.
மேலும் கத்தி படத்திற்கு ஏற்பட்டு வரும் பிரச்சனை குறித்து அவர் கூறும்போது, விஜய்யை எதிர்த்து பிரச்சனை செய்தால் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தோடு தொடர்ச்சியாக அவரது படங்களையே குறிவைத்து ஒருசிலர் செயல்படுகின்றனர். மேலும் ஒருசிலர் விஜய்யின் அபார வளர்ச்சியை கண்டு அஞ்சி நடுங்கி அவருக்கு மறைமுகமாக பிரச்சனை கொடுக்கின்றனர். இந்த இரண்டுமே விஜய் நன்றாக வளர்ந்துள்ளார் என்பது உறுதியாகிறது. ஆனாலும் விஜய் தடைகளை தாண்டி யாரும் அடைய முடியாத உச்சத்தை கூடியவிரைவில் அடைவார் என நான் எதிர்பார்க்கின்றேன் என்று கூறியுள்ளார்.