விஜய் நடித்த ஜில்லா’ திரைப்படம் கடந்த வருடம் தமிழில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுத்தந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது. தமிழில் இயக்கிய இயக்குனர் நேசன் தெலுங்கிலும் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் திட்டம் தற்போது கைவிடப்பட்டு இந்த படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஜில்லா’ என்ற பெயரிலேயே டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நேசன் ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவை தெலுங்கு டப்பிங் உரிமையை பெற்ற நிறுவனத்திடம் கொடுத்துள்ளாராம். அதாவது இந்த படத்தில் சில காட்சிகள் பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் அவர்களை வைத்து தான் படப்பிடிப்பு நடத்தியதாகவும், ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகளை தமிழில் பயன்படுத்தவில்லை என்றும், தெலுங்கில் பிரம்மானந்தத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அந்த காட்சிகளை அப்படியே தெலுங்கு டப்பிங் பதிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ஐடியா கொடுத்துள்ளாராம்.
இந்த ஐடியாவினால் பெரும் உற்சாகம் அடைந்த அந்த நிறுவனம் நேசனை வெயிட்டாக கவனித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இருந்து அதிருப்தி வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்ம்மானந்தம் காட்சிகளை இணைத்தால் தனது கேரக்டரின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அவரது தரப்பு நினைப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ, தெலுங்கில் பிரம்மானந்தம் காட்சிகளுக்காவது இந்த படம் வெற்றி அடைந்துவிடும் என அந்த ஊர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது விஜய் தரப்பை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கிட்ட்த்தட்ட நெருங்கிவிட்ட விஜய், சாதாரண காமெடி நடிகரை பார்த்து பயப்படுகிறார் என்பதுதான் பெரிய காமெடி என்கிறது விஜய் ரசிகர்களின் வட்டாரம்.