‘புலி’ படத்தின் சிக்கல் தீர விஜய் கொடுத்த ரூ.5 கோடி?

‘புலி’ படத்தின் சிக்கல் தீர விஜய் கொடுத்த ரூ.5 கோடி?
puli vijay
விஜய்யின் ‘புலி’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் நடந்த சிக்கலை விஜய் தலையிட்டதன் காரணமாகவே முடிவடைந்ததாக கூறப்படுகிறது. ‘புலி’ படம் வெளியாகாமல் போனதற்கு க்யூப் நிறுவனத்திற்கு தரவேண்டிய கடைசிநேர பணம் செட்டில்மெண்ட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதே காரணம். க்யூப் நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் பாக்கி தொகை தரவேண்டியிருந்த நிலையில், ஐ.டி. ரெய்டு காரணமாக புலி’ படக்குழுவினர்களின் அனைத்து வங்கி கணக்குகளும் ‘லாக்’ செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் விஜய் ரூ.5 கோடி ரூபாய் இன்று காலை தந்ததாகவும், அதன்பின்னரே ‘புலி’ படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியதாகவும் ‘புலி’ தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது. அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டாலும் தற்போது பெருவாரியான திரையரங்குகளில் காட்சிகள் தொடங்கிவிட்டது. விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடனும், ஆர்ப்பாட்டத்துடனும் படத்தை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சிக்கலை தீர்க்க திரையுலகினர் முக்கிய வி.ஐ.பிக்கள் அனைவருக்கும் விஜய்க்கு உதவியதாகவும்,அவர்களுக்கு விஜய் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இன்று அதிகாலைத் தொடங்கி சிறப்புக் காட்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதே தவிர, வழக்கமான காலைக் காட்சிகள் தொடங்கி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ISupportPuli என்று ட்ரெண்ட் உருவாக்கிவருகின்றனர் விஜய்ரசிகர்கள். விஜய் ரசிகர்களின் படத்துக்கான கொண்டாட்டம் மட்டுமில்லாமல் திரையரங்கு முன்பு மறியலிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கு மத்தியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்க்கு ஆதரவாக “ வெயிட்டிங் புலி” என்று ட்விட் செய்துள்ளார். மேலும் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாகி வருவது கவனிக்கத்தக்கது.

Leave a Reply