அட்லிக்கு மட்டும் டபுள் டிரீட் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய இளையதளபதி
இளையதளபதி விஜய் கடந்த சில வருடங்களாக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடுவது என்ற வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் புலி படத்தில் கூட அவர் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு டூயட் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் மட்டும் இரண்டு பாடல்களை அவர் பாடவுள்ளதாகவும், அதில் ஒரு பாடல் உலக தரலோக்கல்’ பாடலாகவும், மற்றொரு பாடல் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் அறிமுகப்பாடல் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு பாடல்களையும் ஜி.வி.பிரகாஷ் கம்போஸ் செய்து தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், இந்த இரண்டு டியூனையும் அட்லி ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு பாடல்களையும் நீங்கள்தான் பாட வேண்டும் என விஜய்யிடம் அட்லி-ஜி.வி.பிரகாஷ் இருவரும் சேர்ந்து வைத்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் இந்த பாடல்களின் ஒலிப்பதிவு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சீனாவில் நடைபெறவுள்ளது.