இளையதளபதி விஜய் இதுவரை பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்கவில்லை. ஆனால் அந்த குறையை போக்கும் விதமாக அவருடன் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் புலி படத்தை அடுத்து அட்லியின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் விஜய்க்கு அப்பாவாக நடிக்கவில்லை என்பது மட்டும் உறுதி என படக்குழுவினர் கூறுகின்றனர்.
பாண்டிய நாடு படத்தில் விஷாலின் அப்பாவாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பாரதிராஜா இந்த படத்திலும் தனது நடிப்பு முத்திரையை பதிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பாரதிராஜா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இதுதான் இருவரும் இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைபுலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலையில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.