கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி கோலிவுட்டில் எவ்விதமான பரபரப்பான செய்தியும் இன்றி அமைதியாக பிறந்தபோது கோலிவுட்டை பெரும் பரபரப்பு ஏற்படுத்திய பெருமை ‘குட்டித்தல’யால் ஏற்பட்டது. ஆம் அஜீத்தின் மகன் அன்றுதான் பிறந்தார்.
அஜீத்தின் ரசிகர்கள் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வாழ்த்துக்கள் கூறி இந்திய அளவில் குட்டித்தலயை டிரண்டாக்கி தங்கள் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர்.
இந்நிலையில் ‘குட்டித்தல’க்கு பெயர் வைக்கும் விழா விரைவில் நடைபெறும் என்றும், அனேகமாக அஜீத் பிறந்த நாளில் குட்டித்தல’க்கு பெயர் வைக்கப்படலாம் என்றும் கோடம்பாக்கத்தில் செய்திகள் பரவி வருகிறது.
அஜீத் இதுவரை எந்த சினிமா விழாவுக்கும் போகாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் குட்டித்தல’யின் பெயர் சூட்டும் விழாவிற்கும் குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைக்க முதலில் முடிவு செய்திருந்தாராம். ஆனால் ஷாலினியின் விருப்பத்திற்கிணங்க கோலிவுட்டின் முக்கிய வி.ஐ.பிக்களையும் அவர் பெயர் சூட்டும் விழாவிற்கு அழைப்பார் என கூறப்படுகிறது.
யார் யாரையெல்லாம் கூப்பிடலாம் என்று அஜீத்-ஷாலினி போட்ட பட்டியலில் விஜய் பெயர் முதலில் உள்ளது என்கிறது அஜீத்தின் நெருங்கிய வட்டாரம்.