பாஜக போராட்டத்தை கண்டுகொள்ளாத விஜய்: எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா!

பாஜக போராட்டத்தை கண்டுகொள்ளாத விஜய்: எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா!

விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் திடீரென பாஜகவினர் போராட்டம் செய்தது பெரும் ரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் இந்த பரபரப்பு ஓய்வதற்குள் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்த இடத்தில் குவிந்தவுடன், போராடிய பாஜகவினர் திடீரென தலைமறைவாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் வெளியே வந்த விஜய் பாஜகவினர் போராட்டம் குறித்து சுத்தமாக கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. அவர் தனது ரசிகர்களிடம் கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து ’எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பார்த்துவிட மாட்டோமா’ என்ற ரீதியில் அவர் கையசைத்தது அவரது தன்னம்பிக்கையை காட்டுவதாகவே தெரிகிறது

மேலும் விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் இனிமேல் பாஜகவை மேலும் தீவிரமாக எதிர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறியதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது

Leave a Reply